நாளை முதல் கொழும்பில் தற்காலிகமாக தங்கியிருப்பவர்களின் விபரங்களை பதிவு
Police
தேசிய பாதுகாப்பினை உறுதி செய்யும் நோக்கத்துடனும் கொழும்பில் போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கத்துடனும் இந்த நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தேசிய பாதுகாப்பினை பாதுகாத்தல் போதைப்பொருள் குற்றச்செயல்கள் ஒழிப்பு என்ற கருப்பொருளின் கீழ் மேல்மாகாண பொலிஸார் இந்த நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளனர்.
இதனடிப்படையில் வீடுகள் வர்த்தக நிலையங்கள் அரசமற்றும் தனியார் நிறுவனங்கள் கட்டுமானம் இடம்பெறும் இடங்கள் போன்றவற்றில் தற்காலிகமாக தங்கியிருப்பவர்களின் விபரங்களை பதிவு செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் ஆரம்பிக்கவுள்ளனர்.
14ம் திகதி முதல் 16ம் திகதி வரை இந்த நடவடிக்கைகள் இடம்பெறும்.
வீதிகள் மற்றும் வீடுகளிற்கு இந்த காலப்பகுதியில் வரவுள்ள காவல்துறையினரிடமிருந்து விண்ணப்படிவங்களை பெற்றுக்கொள்ளுமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தற்காலிகமாக தங்கியிருப்பவர்கள் தங்களை பற்றிய சரியான விபரங்களை பதிவு செய்து ஒப்படைக்கவேண்டும் என பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
No comments: