நீண்ட விடுமுறை - பரிசோதனை விரைவில்

நீண்ட நாள் வார விடுமுறையின் போது பல்வேறு பயணங்களில் ஈடுபட்டிருந்த மற்றும் மக்கள் பெருமளவு கூடிய இடங்களில் இருந்தவர்களுக்கு காச்சல் அல்லது சுவாசம் தொடர்பிலான நோய் நிலைமை அவதானிக்கப்படும் பட்சத்தில் விரைவில் வைத்திய பரிசோதனையை மேற்கொள்வது முக்கியமென்று விஷேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

கொவிட் தொற்றுக்குள்ளான நோயாளிகளுக்கான ஒட்சிஜன் தேவையில் சிறிய அளவு அதிகரிப்பு ஏற்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த நிலை சுகாதார கட்டமைப்பிற்கு அழுத்தமாக இல்லாத போதிலும் இந்த நிலை மேலும் அதிகரிப்பதை தடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த 8 நாட்களுக்குள் போட் சிற்றி நகரை பார்வையிடுவதற்காக 89,540 பேர் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments: