ஊத்துச்சேனைக்கான பிரதான வீதியை புனரமைத்து தருமாறு மக்கள் கோரிக்கை

 (கனகராசா சரவணன்)


மட்டக்களப்பு பொலன்னறுவை எல்லைக்கிராமமான வடமுனை ஊத்துச்சேனைக்கான வெலிகந்தையில் இருந்து ஊத்துச்சேனைக்கான பிரதான வீதி பள்ளமும் குளியுமாக மக்கள் நடந்து கூட செல்லமுடியாதளவிற்கு சகதியான நிலையில் உள்ளது இதனால் அந்தபகுதியைச் சேர்ந்த மக்கள் வெறு பிரதேசத்துக்கு பிரயாணிக முடியாது பல்வேறு துன்பங்களை எதிர்நோக்கிவருவதாக கடும் விசனம் தெரிவிக்கின்றனர்.

கிரான் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள கிராமங்களான வடமுனை எல்.பி, ஊத்துச்சேனை வடமுனை ஆகிய எல்லைக் கிராமங்களிலுள்ள சுமார் 800 குடும்பங்கள்  கடந்த கால யுத்தத்தினால் இடம்பெயந்து பின்னர் குறியேற்றப்பட்டனர்.

இருந்தபோதும் இப்பிரதேசத்துக்கான பிரதூன வீதி வெலிகந்தையில் இருந்து செல்லும் இவ் பிரதான வீதி ஊடாக அந்த பகுதியில் இருக்கும் மதுறு ஓயா ஆற்றிப்பகுதியில் இருந்து நாளாந்தம் சுமார் 50 உழவு இயந்திரம் மற்றும் கனரக வாகனங்கள் ஊடாக மணல் அகழ்ந்து எடுத்துச் செல்கின்றனர்.

இதனால் ஊத்துச்சேனை பாலத்தில் இருந்து வெலிகந்தை சந்திவரையிலான சுமார் 2 கிலோமீற்றர் வரையிலான வீதி மிகவும் பழுதடைந்துள்ளதுடன் வீதியால் நடந்து கூட செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன்  பஸ் போக்குவரத்து கூட தடைப்பட்டுள்ளது இதனால்  நாளாந்த பொருட்கள் கொள்வனவு செய்ய வெலிகந்தைக்கு 9 கிலோமீற்றர் தூரம் சகதியில் நடந்து செல்லவேண்டிய துப்பாகியமான நிலை ஏற்பட்டுள்ளது 

இந்த நிலையில் இந்த மணல் அகழ்வு மற்றும் வீதியை புனரமைத்து தருமாறு கோரி கடந்த டிசம்பர் மாதம் 27 ம் திகதி பிரதேச மக்கள் பொலன்னறுவை கொழும்பு வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன்போது வெலிகந்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அந்த வீதியை புனரமைத்து தருமாறு ஊறுதி மொழியையடுத்து ஆர்பாட்காhர்கள் அங்கிருந்து விலகிசென்றனர்.

ஆனால் கொடுத்த வாக்குறிதியை இதுவரை குறித்த பொலிஸ் அதிகாரி செய்யவில்லை. இவ்வாறான நிலையில் பெய்துவரும் அடைமழை காரணமாக வீதி குளம்போல காட்சியளப்பதுடன் சகதியான நிலை ஏற்பட்டுள்ளதுடன் வீதியின் மதகு ஒன்று இடிந்து வீழ்ந்துள்ளதால் வீதிபோக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் கடும் விசனம் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக சம்மந்தபட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுவந்தும் இதுவரை எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவே உரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்காவிடின் சம்மந்தப்பட்ட திணைக்களங்களை தமது குழந்தைகளுடன்  முற்றுகையிட்டு ஆர்ப்பட்டத்தில் ஈடுபடப்போவதாக மக்கள் தெரிவித்தனர். 

No comments: