மட்டு - கல்லடி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

 (கனகராசா சரவணன்) 

மட்டக்களப்பு காத்தான்குடி பிரதானவீதி கல்லடி விபுலானந்தா இசை நடனக் கல்லூரிக்கு முன்பாக வீதியால் சென்ற மோட்டர்சைக்கிள் மீது  கனரக வாகனம் மோதியதையடுத்து மோட்டார் சைக்கிளில் பிரயாணித்த தந்தையும் மகனும் தூக்கி வீசப்பட்டதையடுத்து  பின்னால் வந்த உழுவு இயந்திரத்தில் சிக்குண்டதில்  தந்தையார் உயிரிழந்ததுடன் மகன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் இன்று புதன்கிழமை (22) மாலை 5 மணிக்கு இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.


ஆரையம்பதியைச் சேர்ந்த  50 வயதுடைய சிவராசா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதுடன் படுகாயமடைந்த மகன் படுகாயங்களுடன்மட்டு போதனா  வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

காத்தான்குடி பகுதியில் இருந்து மட்டக்களப்பை நோக்கி மோட்டார் சைக்கில் சம்பவதினமான இன்று மாலை 5 மணியளவில் மோட்டர்சைக்கிள் ஒன்றில் தந்தையும் மகனும் பிரயாணித்துக் கொண்டிருந்தபோது  இசை நடன கல்லூரிக்கு முன்பாக் வோளாண்மை வெட்டும் இயந்திரம் ஒன்றை ஏற்றி உழவு இயந்திரம் ஒன்றை முந்திச் செல்வதற்காக முயற்சித்த பின்னால் வந்த கனரகவாகனம் மோட்டர்சைக்கிளை மோதியதையடுத்து மோட்டார் சைக்கிள் சென்றவர்கள் தூக்கி வீசப்பட்டடுள்ளனர்.

தூக்கி வீசப்பட்ட இருவரும்  பின்னால் வந்த ஊழவு இயந்திரத்தில் சிக்குண்டதையடுத்து இஜதலத்தில் தந்தையார் உயிரிழந்ததுடன் மகன் படுகாயமடைந்துள்ளதையடுத்து மோட்டார் சைக்கிளில் மோதிய கனரக வாகனத்தின் சாரதி வாகனத்துடன் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். 

இதில் படுகாயமடைந்தவரை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் பஉயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஓப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர் .

இத தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர் 

No comments: