முல்லைத்தீவில் எதிர்க்கட்சித் தலைவர்

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)


எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட அரசியல் கூட்டமொன்று
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு வேனாவில் பிரதேசத்தில் இன்று (10) திங்கட்கிழமை காலை இடம்பெற்றது.

ஐக்கிய மக்கள் சக்தியின் முல்லைத்தீவு மாவட்டத்தின் பிரதான அமைப்பாளர் லக்சயன் முத்துகுமாரசாமி தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில், பாராளுமன்ற உறுப்பினர்களான இரான் விக்கிரமரட்ண, புத்திகபத்திரன, ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி செயலாளர் உமாசந்திர பிரகாஷ், முல்லைத்தீவு மாவட்ட அமைப்பாளர் ஜமால்டீன், புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர்கள், வேனாவில் பிரதேச மற்றும் முல்லைத்தீவு மாவட்ட மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.\


Post a Comment

0 Comments