மட்டு-காத்தான்குடியில் சிறுமியை ஒரு வருடமாக பாலியல் துஷ்பிரயோகம் மேற் கொண்டுவந்த இளைஞன் கைது

 (கனகராசா சரவணன்)


மட்டு காத்தான்குடி பிரதேசத்தில் 16 வயது சிறுமி ஒருவரை ஒருவருடகாலமாக பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டுவந்த சிறுமியின் எதிர்வீட்டைச் சேர்ந்த 23 வயது இளைஞர் ஒருவரை நேற்று ஞாயிற்றுக்கிழமை (09) இரவு கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர். 

குறித்த பிரதேசத்தில் 16 வயது சிறுமியின் தாயார் சுகயீனம் காரணமாக படுத்த படுக்கையில் இரந்துவருகின்றார் இந்த நிலையல் கடந்த ஒருவருடத்துக்கு முன்னர் சிறுமி 15 வயதாக இருக்கும் போது சிறுமியின் எதிர்வீட்டில் உள்ள இளைஞனை திருமணம் முடிப்பதற்கு பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது 

இந்த நிலையில் குறித்த இளைஞன் திருமண பேச்சுவார்த்தை இடம்பெற்ற காலத்தில் இருந்து கடந்த ஒருவருடகாலமாக சிறுமியை பாலியல் துஷ;பிரயோம் மேற்கொண்டுவந்த நிலையில் தற்போது சிறுமியை திருமணம் முடிக்க முடியாது என இளைஞக் மறப்பு தெரிவித்ததையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமியின் உறவினர்கள் பொலிஸ் நிலையத்தில் நேற்று முறைப்பாடு செய்தனர். 

இதனையடுத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துமிந்த நயனசிறியின் ஆலோசனைக்கமைய பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி சப்இன்பெஸ்டர் வை. விஜயராஜா தலைமையிலான பொலிசார் குறித்த இளைஞனை கைது செய்தனர்.

இதில் கைது செய்யப்பட்ட இளைஞனை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர். 

No comments: