மட்டு-(முறாவோடை) யானை தாக்குதலில் ஒருவர் படுகாயம்(கனகராசா சரவணன்)

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிலிலுள்ள முறாவோடை கிராமத்தினுள் உட்புகுந்த யானை தாக்குதலுக்கு ஆண் ஒருவர் இலக்காகி படுகாயமடைந்ததுடன் நிலையில் மட்டு போதனவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் தெய்வாதீனமாக உயிர் தப்பிய சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை (16) அதிகாலையில் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

கிண்ணையடி பகுதியைச் சேர்ந்த இருவர் கடலில் மீன்பிடிப்பதற்றாக சம்பவதினமான இன்று அதிகாலை 3.30 மணியளவில் வீட்டில் இருந்து துவிச்சக்கரவண்டியில் கடலை நோக்கி கிண்ணையடி முறாவோடை பிரதான வீதியால் சென்று கொண்டிருந்தபோது யானை இவர்களை தாக்கியதையடுத்து இருவரும் சைக்கில் இருந்து வீழ்ந்ததையடுத்து ஒருவர் படுகாயமடைந்ததுடன் ஒருவர் அங்கிருந்து தெய்வாதீனமாக தப்பித்துக் கொண்டார்..

இதனையடுத்து படுகாயமடைந்தவரும் அங்கிருந்து தப்பித்ததையடுத்து கோபமடைந்த யானை அவாகள் சென்ற துவிச்சக்கரவண்டியை மிதித்து சோதப்படுத்தியுள்ளதுடன் அந்தபகுதி வேலைகளையும் சேதப்படுத்தியுள்ளது

இதில் 24 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான கேசவராசா ததீஸ்கரன் என்பவரே படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றார் என பொலிசார் தெரிவித்தனர்.

No comments: