மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்டம் மக்களின் பாவனைக்காகஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ ஆகியோரின் தலைமையில் மீரிகம முதல் குருநாகல் வரையிலான மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்டம், பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இதன் நிர்மாணப் பணிகளுக்காக 137 பில்லியன் ரூபா நிதி செலவிடப்பட்டுள்ளது.

மீரிகம முதல் குருநாகல் வரையிலான மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்டத்தின் நீளம் 40.91 கிலோமீற்றர்களாகும்.

4 வழிப்பாதையாக நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த வீதியின் மீரிகமவிலிருந்து குருநாகல் வரையிலான பகுதி, தற்போது இலங்கையின் மிக அழகிய அதிவேக நெடுஞ்சாலைப் பிரிவாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக பெருந்தெருக்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments