அக்கரப்பத்தனை அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தானத்தின் மஹா கும்பாபிஷேக பெருவிழா

(க.கிஷாந்தன்)

மத்திய மலைநாட்டில் நுவரெலியா - அக்கரப்பத்தனை நகரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தானத்தின் மஹா கும்பாபிஷேக பெருஞ்சாந்தி பெருவிழா 23.01.2022 அன்று நடைபெற்றது.

19.01.2022 புதன்கிழமையுடன் ஆரம்பித்த கிரியாரம்பத்தை தொடர்ந்து 22.01.2022 அன்று எண்ணெய் காப்பு நடைபெற்றதுடன் 23.01.2022 அன்று காலை மஹாகும்பாபிஷேக பெருச்சாந்தி பெருவிழா நடைபெற்றது.

சிவஸ்ரீ.சிவகுகேந்திர குருக்களால் செய்து வைக்கப்பட்ட இந்த மஹா கும்பாபிஷேகத்திற்கு நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன், முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர்களான ஏ.பி.சக்திவேல், ஆர்.ராஜாராம், அக்கரப்பத்தனை பிரதேச சபை தலைவர் கதிர்செல்வன் என பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும், தொடர்ந்து 48 நாட்களுக்கு மண்டலாபிஷேகம் நடைபெறவுள்ளமை குறிப்பிடதக்கது.


No comments: