வீடு ஒன்று தீக்கிரையாக்கப்பட்ட சம்பவத்தில் இரு பெண்கள் உட்பட 7 பேர் கைது

(கனகராசா சரவணன்)

தொர்புடைய செய்தி

மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் பிரிவிலுள்ள பாலைமீன்மடு 50 வீட்டுத் திட்டத்தில் வீடு ஒன்று தீக்கிரையாக்கப்பட்ட சம்பவம் தொடர்பா சந்தேகத்தில் இரு பெண்கள் உட்பட 7 பேரை இன்று வியாழக்கிழமை (06) கைது செய்துள்ளதாக கொக்குவில் பொலிசார் தெரிவித்தனர்.

கடந்த சனிக்கிழமை (01) குறித்த பகுதியிலுள்ள மீன்பிடியில் ஈடுபட்டுவரும் இருகுழுவினர் மதுபானம் அருந்தியுள்ள நிலையில் ஏற்பட்ட வாய்த்தர்கம் சண்டையாக மாறியதையடுத்து ஒருவர் படுகாயமடைந்ததுடன் இந்த சம்பவத்துடன் தொடர்புபட்ட நாகநாதன் நவநீதனின் வீடு இனம் தெரியாதோரால் தீக்கிihயக்கப்பட்டதையடுத்து வீடு முற்றாக எரிந்து சாம்பலாகியது.

இச் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டுவந்த பொலிசார் இச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இரு பெண்கள் உட்பட 7 பேரை கைது இன்று வியாழக்கிழமை செய்தனர்

இதில் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.


No comments: