திருமலையில் இருந்து அம்பாறை நோக்கி பயணித்த பேருந்து விபத்து 27 பேர் வைத்தியசாலையில் அனுமதி

 (கனகராசா சரவணன்)

திருகோணமலையில் இருந்து அம்பாறை நோக்கி பயணித்த பயணிகள் பேருந்து மூதூர் பட்டிப்பளை பகுதியில் இன்று காலை 7.45 மணியளவில் டிப்பர் வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்து சம்பவத்தில் பேருந்தில் பயணித்த 27 பயணிகள் காயங்களுடன் திருகோணமலை, மூதூர் வைத்தியசாலைகளில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments: