திருக்கோவில் - மகனுக்கு அநீதி இடம் பெற்றுள்ளது (பொலிஸ் சாஜனின் தாயார் விளக்கம்)


மகனுக்கு பொலிஸ் நிலயத்தில் அநீதி இடம் பெற்றுள்ளது மருத்துவ அறிக்கை பெற்றிருந்ததால்  சும்மா இருந்து சம்பளம் பெறுவதாக  தெரிவித்திருந்தனர்.

 இவரும் ஒரு மனிதரல்லவா இந்த அளுத்தம் இவருக்கும் இருந்துள்ளது அவர் மெனராகலைக்குச் செல்ல முற்பட்டபோது அங்கு செல்ல வேண்டாம் அத்திமலை சென்று சரணடையுமாறு கூறினோம் அதன் பின்னரே அவர் சரணடைந்தார் வீட்டிற்கு வந்து என்னையும் வணங்கி விட்டுச் சென்றார் .

சம்மாந்துறையில் கடமையாற்றும் போது விடுமுறையின்றி 100 நாட்கள் தனது மகன் கடமை புரிந்துள்ளதாக குறித்த போக்குவரத்து பிரிவு சாஜனின் தாயார் குறப்பிட்டுள்ளார்.

எனது மகன் 2012ம் ஆண்டில் இருந்து சீருடை அணிவதில்லை காலில் செய்த சத்திர சிகிச்சை காரணமாக அவர் இதற்கு காரணமாக இருந்தது. மதுபானம் அருந்த மாட்டார்.

லாகுகலை பகுதியில் மகனின் வாகனத்திற்கு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கி பிரயோகம் மேற் கொண்ட பொலிஸ் உத்தியோகத்தரின் தாயார் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

குறத்த சந்தேக நபர் 14 நாட்கள் விளக்கமறயலில் வைக்கப்பட்டுள்ளமை குறப்பிடத்தக்கதுNo comments: