குழந்தையை பொருப்பேற்க்க மறுத்தமையினால் எல்பட தோட்டத்தில் அமைதியின்மை


எல்பட கீழ் பிரிவு தோட்டப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட

ஆர்ப்பாட்டத்தின் போதே இந்த அமைதியின்மை ஏற்பட்டது.

குறித்த தோட்டப்பகுதியில் தொழில்புரியும் ஆண் தொழிலாளி ஒருவரின்
குழந்தையை குறித்த தோட்டத்தில் இயங்கும் சிருவர் அபிவிருத்தி
நிலையத்திற்கு பொருப்பேற்காததனால்

சிறுவர் பாராமரிப்பு நிலைத்தில் தனி இராஜியம், சிறுவர்களை துன்புருத்திய ரோகினி, போன்ற பாதாதைகளை ஏந்தியவாறு. சிறுவர் பாராமரிப்பு நிலையத்தில் உள்ள சிறுவர்களை வெளியேற்றி தொழிலாளர்கள் ஆர்பாட்டத்தினை முன்னெடுத்தப்போது கடுமையான வாக்குவாதமும்
அமைதியின்மையும் ஏற்பட்டது.

தோட்ட நிர்வாகம் குழந்தைகளை சிறுவர் நிலையத்திற்கு பொருப்பேட்குமாறு
கூறுகிறது ஆனால் சிறுவர் நிலையத்தில் தொழில்புரிகின்றவர் குழந்தைகளை பொருப்பேற்க மறுக்கிறார்கள் 

அதற்கு என்ன காரனம் என்று தெரியவில்லை பொருப்பேற்க முடியாது என கூறிய குழந்தையின் தாய் ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரீகிறார் குழந்தையின் தந்தை தோட்ட தொழிலாழி இவ்வாறு இருக்கின்ற போது
ஏன் குழந்தையை பொருப்பேற்க முடியாது. என தொழிலாளர்கள் கேல்வி எழுப்பினர்.

எல்பட கீழ்பிரிவு தோட்டத்தில் இயங்கும் சிறுவர் அபிவிருத்தி நிலையத்தில்
உள்ள ழூன்று உத்தியோகத்தர்களையும் உடனடியாக வெளியேற்றப்பட வேண்டு எனதெரிவித்து

 தோட்ட நிர்வாகத்திடம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மனு ஒன்றையும் வழங்கினர். இந்த விடயம் தொடர்பில் குறித்த தோட்டத்திற்கு பொருப்பான முகாமையாளரை தொடர்பு கொண்டு வினவியபோது இந்த விடயம் முற்றிலும்தவறு ஆகையால் எதிர்வரும் திங்கள் கிழமை குறித்த ழூன்று உத்தியோகத்தர்களுக்கு எதிராக விசாரனை ஒன்றை மேற்கொண்டு இதற்கான தீர்வு பொற்று கொடுக்கப்படும்மென தெரிவித்தார்.

இதேவேலை குறித்த சிறுவர் அபிவிருத்தி நிலையத்திற்கு குழந்தையினை பொருப்பேற்காமையினால் குறித்த உத்தியோகத்தர்களுக்கு எதிராக நோர்வூட் பொலிஸ் நிலையத்தில் முறைபாடு பதிவு செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடதக்கது.

No comments: