மஸ்கெலியா பிரதேசசபையின் உபதலைவர் மீது தாக்குதலை மேற்கொண்ட இரண்டு உறுப்பினர்கள் கைது.


எஸ்.சதீஸ்


மஸ்கெலியா பிரதேசசபையின் உபதலைவர் பெரியசாமி பிரதீபன் மீது தாக்குதல்
மேற்கொண்ட இரண்டு உறுப்பினர்களை மஸ்கெலியா பொலிஸார் கைது செய்துள்ளதாக
மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர் 15.12.2021.புதன்கிழமை இரவு இந்த கைது
இடம்பெற்றதாக பொலிஸார் மேலம் தெரிவித்தனர்.

கடந்த 13ம் திகதி மஸ்கெலியா பிரதேசசபையின் உபதலைவர் பெரியசாமி பிரதிபiனை
சபைஅமர்வின் போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் ஒருவரும்
மற்றும் இலங்கை தொழிலாளர் காங்ரஸின் உருப்பினர் ஒருவரும் தாக்கப்பட்ட
சம்பவம் தொடர்பில் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு
செய்யப்பட்டதை அடுத்து. பலத்த காயங்களுக்கு உள்ளாகிய மஸ்கெலியா
பிரதேசசபையின் உபதலைவர் பெரியசாமி பிரதீபன்  வைத்தியசாலையில்
அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதேவேலை சம்பவம் தொடர்பில் விசாரனைகளை ஆரம்பித்த மஸ்கெலியா பொலிஸார்
இலங்கை தொழிலாளர் காங்ரஸின் உறுப்பினரும் மஸ்கெலியா பிரதேசசபை
உறுப்பினருமான பி.அனந்தராஜ், மற்றும் மஸ்கெலியா பிரதேசசபையின் ஸ்ரீலங்கா
பொதுஜன பெரமுனவின் உருப்பினர் எஸ்.ஏ.திஷாநாயக்க ஆகிய இருவருமே கைது
செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார் கைது செய்யப்பட்ட இரண்டு
உறுப்பினர்களையும் ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலை படுத்த நடவடிக்கை
எடுத்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்

No comments: