கூட்டு ஒப்பந்தம் விடயத்தில் ஆசையை காட்டி தொழிலாளர்களை மோசம் செய்ய முயற்சிக்கின்றனர் - ஜீவன்

எஸ்.சதீஸ்

கூட்டுஒப்பந்தம் விடயத்தில் மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களை மாற்றுதொழிற்சங்கத்தினர் ஆசையினை காட்டி மோசம் செய்வதாக இலங்கை தொழிலாளர்காங்ரஸின் பொதுச்செயலாளரும் வீடமைப்பு மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு இராஜாங்க அமைசச்ர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

31.12.2021.நோர்வூட் தியஸ்ரீகமபகுதியில் அம்பகமுவ உப பிரதேசசெயலாளர்
காரியாலயத்தினை திறந்து வைத்து ஊடகவியலாளர்கலாள் எழுப்பபட்ட கேல்விக்கு பதிலழிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதன் போது மேலும் கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான். பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள பிரச்சினைக்கு ஒரே தீர்வு என்பது கூட்டுஒப்பந்தம் மாத்திரமே. சிலர் கூறுகிறார்கள் கூட்டு ஒப்பந்தம் தேவையில்லையென கூறுகிறார்கள்.

எமக்கு ஒரே பிரதமர் மஹிந்தராஜபக்ஸ மாத்திரமே வேறு எவரும் கிடையாது
எதிர்கட்சியினர் இது போன்ற பொய்யான வாந்திகளை பரப்பி வருகின்றனர். எனவே தொடர்ந்தும் மஹிந்தராஜபக்ஸ அவர்களே பிரதமராகவகிப்பார்.

தற்பொழுது நாட்டில் கானப்படுகின்ற சூழ்நிலை காரனமாக இம்முறை இலங்கை தொழிலாளர் காங்ரஸ் தைபொங்கள் விழா போன்ற நிகழ்வுகளை நடத்தாது நாம் கூறுவது எல்லாம் மக்களை பாதுகாப்பாக இருக்க வேண்டும் 

பிறக்கவிருக்கும் புதுவருடத்தில் மலையக மகக்ள்
மாத்திரமல்லாது அனைத்து மக்களின் பிரச்சினைகளும் தீர்க்கப்படுமென
குறிப்பிட்டார்.


No comments: