கைதியொருவருக்கு தபால் மூலம் கிடைத்த ஹெரோயின்

அங்குனுகொலபெலெஸ்ஸ சிறைச்சாலையில் உள்ள கைதியொருவருக்கு தபால் மூலம் கிடைத்த பொதியொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 680 கிராம் ஹெரோயின் காவல்துறை விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.

ஹெரோயினுடன் தொடர்புடைய குற்றத்திற்காக ஆயுள் தண்டனை பெற்ற கைதி ஒருவருக்கே குறித்த பொதி கிடைக்கப்பெற்றுள்ளதாக காவல்துறை விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

காற்சட்டைக்குள் மிக நுட்பமான முறையில் குறித்த ஹெரோயின் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், மேலதிக விசாரணைகளுக்காக குறித்த ஹெரோயின் அங்குனுகொலபெலெஸ்ஸ காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

No comments: