தனியார் இலகுரக விமானம் அவசரமாக தரையிறக்கம் இருவருக்கு காயம்

தனியார் நிறுவனமொன்றுக்கு சொந்தமான செஸ்னா 172 என்ற தனியார் இலகுரக விமானம் இன்று பிற்பகல் நீர்கொழும்பு கிம்புலபிட்டியவில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

விமானத்தில் பயணித்த நான்கு பயணிகளில் இருவர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.

இதே தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான இலகுரக பயிற்சி விமானம் ஒன்று தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஐந்து நாட்களுக்கு முன்னர் பயாகலைக்கும் பேருவளைக்கும் இடையில் அவசரமாக தரையிறக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

No comments: