ஸ்ரீ இராம கிருஷ்ணா தேசிய பாடசாலை அதிபராக இன்று கடமைகளை பொறுப்பேற்றார் டேவிட் அமிர்தலிங்கம் (SLPS -I)


அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று கமு/திகோ/ ஸ்ரீ இராம கிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலை அதிபராக அதிபர் டேவிட் அமிர்தலிங்கம்  (SLPS-1) . MA.(political Sc), M.Ed, Dip.in,Edu, (Distinction), Dip.in.Edu,Mgt (Merit) அவர்கள் இன்று உத்தியோக பூர்வமாக தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

திருக்கோவில் வலயக்கல்வி பணிப்பாளர் முன்னிலையில் இன்று  அக்கரைப்பற்று கமு/திகோ/ ஸ்ரீ இராம கிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலையின் அதிபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

கடந்த ஜனவரி மாதம் நடந்தநேர் முகப்பரீட்சை பெறுபேறின் அடிப்படையில்  03/06/2021 முதல் செயற்படும் வண்ணம் அரசாங்க சேவை ஆணைக்குழுவின் கல்வி சேவை ஆணைக்குழுவின் செயலாளரின் அனுமதியின் பிரகாரம் கல்வி அமைச்சின் செயலாளரால் நேற்றைய தினம் நேரடியாக அழைக்கப்பட்டு குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்மை குறிப்பிடத்தக்கது .Post a Comment

0 Comments