மட்டக்களப்பு துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒருவர் பலி


இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் மட்டக்களப்பு வீட்டிற்கு முன்பாக சற்று நேரத்துக்கு முன்பு துப்பாக்கிச்சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு பிள்ளையாரடி பகுதியில் உள்ள இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரனின் வீட்டுக்கு அருகில் துப்பாக்கி சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இந்த சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்ட்டுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக மட்டக்களப்பு வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், மட்டக்களப்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

No comments: