பயணத்தடையின் போது இவற்றிக்கு மாத்திரம் அனுமதி


அத்தியாவசிய சேவைகள், ஆடைத்தொழிற்சாலைகள், பாரிய கட்டுமான பணிகள், கிராமிய சந்தைகள், விவசாயம் மற்றும் சேதன உர உற்பத்தி ஆகிய பணிகளை பயணக்கட்டுப்பாட்டு காலப்பகுதியில் சுகாதார வழிகாட்டல்களின் கீழ் முன்னெடுக்க முடியும் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதேவேளை,நாட்டில் தற்போது அமுலாக்கப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 21ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment

0 Comments