நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ள தொற்றாளர்கள் விபரம்

 


இலங்கையில் தொடர்ச்சியாக கடந்த 3 நாட்களில் நாளாந்த கொவிட் தொற்றாளர் எண்ணிக்கை 3000ஐ கடந்திருந்தது.

இந்நிலையில் நேற்றையதினம் 3,410 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியானது.

வெளிநாடுகளில் இருந்து நாடுதிரும்பிய 12 பேருக்கும் நேற்று கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதன்படி புத்தாண்டு கொத்தணி, திவுலுபிட்டிய, பேலியகொட, சிறைச்சாலை ஆகிய கொத்தணிகளில் அடையாளம் காணப்பட்ட மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 192,584 ஆக அதிகரித்துள்ளது.

புத்தாண்டு கொத்தணியில் 94,065 பேரும், பேலியகொட கொத்தணியில் 82,785 பேரும், சிறைச்சாலை கொத்தணியில் 6,013 பேரும், திவுலபிட்டிய கொத்தணியில் 3,059 பேரும் இதுவரையில் அடையாளம் காணப்பட்டனர்.

இவ்வாறு இலங்கையில் மொத்தமாக கொவிட் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 199,254 ஆக அதிகரித்துள்ளது.

தற்போதைய நிலைமையில் 33,317 பேர் கொவிட் தொற்றுக்குள்ளாகி தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

நேற்று 1,884 பேர் கொவிட் தொற்றில் இருந்து குணமடைந்து சிகிச்சை மையங்களில் இருந்து வெளியேறினர்.

இதன்படி குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 164,281 ஆக உயர்வடைந்துள்ளது.

Post a Comment

0 Comments