களுவாஞ்சிகுடி பிராந்திய சுகாதாரப்பணிமனையினால் பி.சி.ஆர் பரிசோதனை

செ.துஜியந்தன்


களுவாஞ்சிகுடி பிரதேசத்தை கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான செயற்பாட்டில் பிராந்திய சுகாதாரப்பணிமனை ஈடுபட்டுள்ளது.
களுவாஞ்சிகுடி சுகாதாரப்பணிப்பாளர் டாக்டர் எஸ்.இராஜேந்திரன் வழிகாட்டலில் மேற்பார்வை பொதுச்சுகாதாரப்பரிசோதகர் எஸ்.யோகேஸ்வரன் ஒழுங்கமைப்பில் ஏனைய பொதுச்சுகாதாரப் பரிசோதகர்களின் பங்களிப்புடன் இங்குள்ள கிராமங்களில் தொடர்ச்சியாக பி.சி.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

இன்று(05) பெரியகல்லாறு, கோட்டைக்கல்லாறு, களுதவாளை ஆகிய கிராமங்களில் ஏற்கனவே கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புபட்டவர்கள், சுயதனிமைப்படுத்தலில் இருந்தவர்கள் என 59பேருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் எவருக்கும் தொற்று ஏற்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக களுவாஞ்சிகுடி பிரதேசத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்து வருவதாகவும், பொதுமக்கள் சுகாதாரவிதிமுறைகளை பின்பற்றி சுகாதாரப்பிரிவினர் எடுக்கும் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்கினால் விரைவில் பிராந்தியத்தில் கொரோனா தொற்றைக்கட்டுப்படுத்த முடியும் என சுகாதாரப்பணிமனை தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments