கடலுக்குச் சென்ற பொத்துவில் பிரதேச மீனவர்கள் வீடு திரும்பாததால் பதற்றம்
(எஸ்.அஷ்ரப்கான்)
ஒரு வாரமாகியும் இன்னும் வீடு திரும்பாத நிலையில் மீனவர்கள் இருவர் பொத்துவிலில் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 23 ஆம் திகதி அதிகாலை பொத்துவில் அறுகம்பை மீன்பிடித் துறையிலிருந்து OFRP -A- 1456- KMN எனும் இலக்க அடையாளம் கொண்ட இயந்திரப்படகில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற இரு மீனவர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக உறவினர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
பொத்துவில் களப்புக்கட்டு பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தையான மொகமட் தாஹா என்பவரும் பொத்துவில் பசரிச் சேனையைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையுமான 32 வயதுடைய ஜெளபர் தாஜுதீன் என்ற இருவருமே ஒரு வாரமாகியும் இன்று வரை வீடு திரும்பாத நிலையில் காணாமல் போயுள்ளனர்.
கடந்த 23ம் திகதி அதிகாலை வீட்டில் இருந்து 5 லீட்டர் குடி நீரோடும் , 8 ஆப்பயுமே உணவாக எடுத்துச் சென்றுள்ளார்கள். தினமும் அதிகாலை கடலுக்கு மீன் பி்டிக்கச் சென்றால் மதியம் வீடு வந்துவிடுவார்கள் அல்லது இறுதி நேரமாக பி.ப.இரண்டு மணிக்குள் வளமையாக வீடு திரும்புவார்கள் ஆனால் தற்போது ஒரு வாரமாகியும் எங்களது தந்தை வீடு திரும்பவில்லை என 6 பிள்ளைகள் கண்ணீரோடு தங்களது தந்தைகளை தேடி அலைகின்றனர்.
அதே வேளை காணாமல் போன இருவரையும் இலங்கை கடற்படையினர்கள் இதுவரை தேடி வருவதாகவும் தெரிவிப்பதோடு மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.

அவர்கள் என்ன ஆனார்கள் அவர்களுக்கு என்ன நடந்தது என்று எந்தவொரு தகவலும் இதுவரை தெரியாத நிலையில் நானும் எனது பணியாளர்களின் குடும்பத்தினர்களும் ஆழ்ந்த கவலையில் இருக்கின்றோம் எனவே இவர்களை தேடித் தருமாறு துறைசார்ந்தோரிடமும் அரசியல்வாதிகளையும் அரசையும் கேட்டுக் கொள்கின்றேன் என காணாமல் போன பணியாளர்களின் படகினது உரிமையாளர் ஐயூப்கான் கவலை தெரிவிப்பதோடு இது தொடர்பாக இவர்கள் தொடர்பில் அரசாங்கம் எங்களுக்கு சரயானதொரு தகவலை தர வேண்டும் என்றும் தெரிவித்தார்.

No comments: