கிழக்கில் நேற்று மாத்திரம் 8421 தடுப்பூசிகள் ஏற்றப்படுள்ளதுகிழக்கில் நேற்றைய தினம் மாத்திரம் 8421 தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஏ.ஆர்.எம் தௌபிக் தெரிவித்தார்.

இதனடிப்படையில் கிழக்கு மாகாணத்தில் கிடைக்கப் பெற்ற தடுப்பூசிகளின் எண்ணிக்கைக்கு அமைவாக
திருகோணமலை , மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களுக்கு தலா 25000 இருபத்தி ஐயாயிரம் என்ற வகையில் மூன்று மாவட்டங்களுக்கும் 75000 எழுபத்தி ஐயாயிரம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

நேற்றைய தினம் (8) மட்டக்களப்பு மாவட்டத்தில் 1350 , பேருக்கும் திருகோணமலை மாவட்டத்தில் 1441 பேருக்கும் , அம்பாறை மாவட்டத்தில் 5630 பேருக்குமாக கிழக்கில் 8421 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.

60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் , அரச நிறுவனங்களில் கடமை புரியும் வெளிக்கள ஊழியர்கள், கர்பிணிகள், பாலுட்டும் தாய்மார் ஆகியேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்படுவதாகவும் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஏ.ஆர்.எம் தௌபிக் தெரிவித்தார்.

இன்றும் கிழக்கில் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments