கோட்டைக்கல்லாற்றில் 323 முதியோர்களுக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டது.


 
செ.துஜியந்தன் 

இன்று(10) கோட்டைக்கல்லாறு கிராமத்தில் 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு சைனோபார்ம் தடுப்பூசி ஏற்றும் பணிகள்முன்னெடுக்கப்ட்டன. 

 களுவாஞ்சிகுடி பிராந்திய சுகாதாரப்பணிமனையினால் கடந்த மூன்று தினங்களாக பிரதேசத்தில் தடுப்பூசி ஏற்றும் பணிகள் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. 

பிராந்திய சுகாதாரப்பணிப்பாளர் டொக்டர் எஸ்.இராஜேந்திரன் வழிகாட்டலில் மேற்பார்வை பொதுச்சுகாதாரப்பரிசோதகர் எஸ்.யோகேஸ்வரனின் ஒழுங்கமைப்பில் பொதுச்சுகாதாரப்பரிசோதகர்கள் மற்றும் குடும்பநல உத்தியோகத்தர்களின் ஒத்துழைப்பில் பொதுமக்களுக்கான தடுப்பூசி ஏற்றும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. 

இதற்கு களுவாஞ்சிகுடி பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர் கோட்டைக்கல்லாற்றில் மூன்றாவத அலையில் அதிகமான கொரோனா நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர்.

 இதன் முன்னுரிமை அடிப்படையில் அப் பிரதேசத்திலுள்ள முதியோர்களுக்கு இத் தடுப்பூசி ஏற்றப்பட்டன. இங்கு கோடடைக்கல்லாறு கிழக்கில் 181 பேர், மேற்கில் 142 பேர் என 323 பேருக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளன

Post a Comment

0 Comments