14ம் திகதியும் நடமாட்ட கட்டுப்பாட்டை நீக்க முடியாது !

தற்போது கொவிட்-19 பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், எதிர்வரும் 14ம் திகதியும் நடமாட்டக் கட்டுப்பாட்டை நீக்க முடியாது என்று, பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தல் அமுலில் இருக்கின்ற போதும், மக்களது நடமாட்டத்தை கணிசமாக கட்டுப்படுத்த முடியாத நிலைமை நிலவுகிறது.

நடமாட்டக் கட்டுப்பாட்டின் மூலம் 90 சதவீதமான நடமாட்டத்தை கட்டுப்படுத்த எதிர்பார்க்கப்பட்டது.

பணியாளர்கள் நாளாந்தம் தங்களது பணிகளுக்கு செல்வதால், கொழும்பு நகரம் தொடர்ந்தும் சனநடமாட்டம் உள்ள இடமாகவே இருக்கிறது.

இவ்வாறானா சூழ்நிலையில், அடுத்தவாரமும் நடமாட்டத் தடையை நீக்க முடியாத நிலைமையே நிலவுகிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments