பயணத்தடை 14ம் திகதி வரை நீடிப்பு


நாடு முழுவதும் தற்போது அமுலில் உள்ள நடமாட்டக் கட்டுப்பாடு எதிர்வரும் 14ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திரசில்வா தெரிவித்துள்ளார்.

நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் நிலை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே எதிர்வரும் 7ஆம் திகதி வரை நடமாட்டக் கட்டுப்பாடு தொடரும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் எதிர்வரும் 14ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை நடமாட்டக் கட்டுப்பாடு நீடிக்கப்படுவதாக இராணுவத் தளபதி மேலும் தெரிவித்தார்

Post a Comment

0 Comments