பிறந்தநாள் கொண்டாட்டம் : கைதாகிய 13 பேரும் தனிமைப்படுத்தலில்

தனிமைப்படுத்தல் விதிகளை மீறி கொழும்பு நட்சத்திர விருந்தகத்தில் நடத்தப்பட்ட பிறந்தநாள் நிகழ்வில் கலந்துகொண்ட குற்றச்சாட்டில் கைதாகி பின்னர் பிணையில் விடுதலையான சந்தேகநபர்கள் 13 பேரும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

கடந்த 30 ஆம் திகதி இடம்பெற்ற இந்த மேற்படி பிறந்தநாள் விருந்துபசாரத்தை ஏற்பாடு செய்த அழகுக்கலை நிபுணர் சந்திமால் ஜயசிங்க மற்றும் நடிகை பியூமி ஹன்சமாலி ஆகிய இருவரும் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

இவர்கள் இருவரும் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்படவுள்ளதாக காவல்துறை மேலும் தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments