திருக்கோவில் பொலிஸ் நிலையத்திற்கு மாற்று நடவடிக்கை (11 பொலிசாருக்கு கொரோனா தொற்று)


இன்று திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் 48  பொலிசாருக்கு மேற் கொள்ளப்பட்ட ரெப்பிட் அன்ரிஜன் பரிசோதனையில் 11 பொலிசாருக்கு தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளதாக திருக்கோவில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் (பரநிருபசிங்கம் மேகானகாந்தன்) தெரிவித்தார்.

இன்றைய தினம் காய்ச்சல் மற்றும் இருமல் காரணமாக திருக்கோவில் வைத்தியசாலையில் திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் அனுமதிக்கப்பட்டிருந்த வேளை குறித்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதன் பின்னர் மேற் கொள்ளப்பட்ட பரிசோதனையில் 11 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

திருக்கோவில் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் அனைவரும் தங்களது வீடுகளில் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் தொற்றாளர்களாக அடையாளப்படுத்தப்படவர்கள் நாளை பதியத்தலாவை தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

திருக்கோவில் பிரதேசத்தில் பொலிஸ் நடவடிக்கைகளை முன்னெடுக்க அக்கரைப்பற்று மற்றும் பொத்துவில் பொலிஸ் நிலைய பொலிசார் கடமையில் ஈடுபட நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டுள்ளதாகவும் திருக்கோவில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி மேலும் தெரிவித்தார்.

குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்  ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிவைச் சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Post a Comment

0 Comments