விருந்துபசாரத்தில் கலந்து கொண்ட மேலும் 06 பேர் கைது


கொழும்பிலுள்ள ஐந்து நட்சத்திர விருந்தகத்தில் நேற்று முன்தினம் இரவு நடத்தப்பட்ட விருந்துபசாரம் தொடர்பில் மேலும் 6 பேர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் நேற்றைய தினம் ஆண் ஒருவரும், பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.


இதற்கமைய குறித்த விருந்துபசாரத்தில் பங்கேற்ற 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு ஏனையோரை அடையாளம் காண்பதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

கைதானவர்களில் பெண் ஒருவரும் அடங்குவதாக காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

கொழும்பு - கோட்டை காவல்துறையினரால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த 6 பேரையும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments