தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு இராணுவ தளபதி விடுத்துள்ள அறிவிப்பு


தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு உணவு மற்றும் பிற அத்தியாவசிய பொருட்களை வழங்க அனுமதிக்கப்படும் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது கொரோனா தொற்று காரணமாக 13 மாவட்டங்களில் 90க்கும் மேற்பட்ட பொலிஸ் பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன என இராணுவ தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.

புத்தாண்டு கொரோனா கொத்தணி கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து இலங்கையில் கொரோனா தொற்றின் மூன்றாவது அலையானது வெளிப்பட ஆரம்பித்துள்ளன என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments: