நாட்டின் பல பிரதேசங்களில் மழை...!


நாட்டின் பல பாகங்களிலும் இன்று இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய மேற்கு,சப்ரகமுவ,மத்திய மற்றும் வடமேல் மகாணங்களின் சில பகுதிகளிலும் பதுளை,காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளிலும் இவ்வாறு இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments