காவல்துறை அதிகாரிகளின் விடுமுறைகளும் ரத்து
இன்று நள்ளிரவு முதல் எதிர்வரும் 31ஆம் திகதி வரை அனைத்து காவல்துறை அதிகாரிகளின் விடுமுறைகளும் ரத்து செய்யப்படுவதாக காவல்துறை ஊடக பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
காவல்துறை தலைமையகத்தில் தற்போது இடம்பெற்று வரும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
இதேவேளை, தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில் உள்ள காவல்துறை அதிகாரிகள் தனிமைப்படுத்தல் உத்தரவு நீக்கப்படும் வரையில் கடமைக்கு சமுகமளிக்க தேவையில்லை என காவல்துறை ஊடக பேச்சாளர் அஜித் ரோஹண மேலும் தெரிவித்துள்ளார்.
No comments: