அத்தியாவசிய தேவையின்றி அனுமதி (கடிதம்) வழங்கும் நிறுவன தலைவர்கள் மீது நடவடிக்கை


இன்று காலை 6.30 மணி முதல் 10.30 மணி வரையான காலப்பகுதிக்குள் மேல் மாகாணத்திற்கு 55,944 வாகனங்கள் பிரவேசித்துள்ளன.

இதில் சுகாதார சேவையுடன் தொடர்புடைய வாகனங்கள் அதிகம் காணப்பட்டுள்ளதுடன்

அத்தியாவசிய தேவைகள் எதுவுமின்றி 3,528 வாகனங்கள் பிரவேசித்துள்ளதாக இன்று காவல்துறை தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது காவல்துறை பேச்சாளர் இதனை குறிப்பிட்டிருந்தார்.

எவ்வித காரணமும் இன்றி அத்தியாவசிய சேவைகளுக்கான கடிதங்களை வழங்கும் நிறுவனங்களின் தலைவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

Post a Comment

0 Comments