நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்கள் பற்றிய விபரம்


நாட்டில் நேற்றைய தினம் மேலும் 1,914 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களில் 1860 பேர் புத்தாண்டு கொத்தணிப் பரவலுடன் தொடர்புடையவர்கள் என்பதுடன்,54 பெர் வெளிநாடுகளிலிருந்து வருகைத் தந்தவர்கள் ஆவர்.

இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 115,590 ஆக அதிகரித்துள்ளது.

அவர்களில் 99,153 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில், தொற்றுக்கு உள்ளான 15,728 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.


Post a Comment

0 Comments