நடமாடும் வியாபாரிகளுக்கு விசேட ஆடை


நடமாட்டக் கட்டுப்பாட்டு காலப்பகுதியில், வீடுகளுக்கு சென்று வெதுப்பக உற்பத்திகளை விற்பனை செய்யும் நபர்களினதும், நுகர்வோரினதும் சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக விசேட ஆடை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் முதற்கட்டமாக, மிரிஹான காவல்துறை அதிகார பிரிவில், நடமாடும் சேவையில் வெதுப்பக உற்பத்தி விற்பனையில் ஈடுபடும் 33 வர்த்தகர்களுக்கு நேற்றைய தினம் இந்த விசேட ஆடை வழங்கப்பட்டது.

உடலை முழுமையாக மறைக்கும் ஆடை, முகக்கவசம், தலைக்கவசம், கையுறை என்பன இவ்வாறு வழங்கப்பட்டுள்ளன.

கொழும்பு மாவட்டத்தில், அத்தியாவசிய பொருட்கள் விநியோகத்திற்காக 8,895 நடமாடும் வர்த்தகர்கள் பதிவுசெய்துள்ளதாக மாவட்ட செயலாளர் பிரதீப் யசரத்ன தெரிவித்துள்ளார்.

நடமாடும் வர்த்தகர்கள் வராவிட்டாலோ அல்லது சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளுக்கு அமைய செயற்படாவிட்டாலோ, அது குறித்து, 0112 369 139 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments: