நாட்டில் கொரோனா தொற்று - நேற்றைய தினம் மேலும் 9 உயிரிழப்புகள் பதிவு


நாட்டில் நேற்றைய தினம் மேலும் 1,716 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களில் 1699 பேர் புத்தாண்டு கொவிட் - 19 கொத்தணிப் பரவலுடன் தொடர்புடையவர்கள்.

அதேநேரம் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய 17 பேரும் அடங்குவர்.

இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 109,862 ஆக அதிகரித்துள்ளது.

அவர்களில் 96,478 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில், தொற்றுக்குள்ளான 12,697 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இதேவேளை கொரோனா தொற்றுக்குள்ளாகி மேலும் 09 கொரோனா மரணங்கள்  நேற்றைய தினம்  பதிவாகியுள்ளன.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 687 ஆக அதிகரித்துள்ளது.

இதற்கமைய, கரந்தன பிரதேசத்தை சேர்ந்த 65 வயதுடைய ஆண் ஒருவரும், அவிசாவளை பிரதேசத்தை சேர்ந்த 72 வயதுடைய ஆண் ஒருவரும், ருவான்வெல்ல பிரதேசத்தை சேர்ந்த 75 வயதுடைய ஆண் ஒருவரும், தேவாலகம பிரதேசத்தை சேர்ந்த 66 வயதுடைய பெண் ஒருவரும், மாவனெல்லை பிரதேசத்தை சேர்ந்த 79 வயதுடைய ஆண் ஒருவரும், யக்வில பிரதேசத்தை சேர்ந்த 33 வயதுடைய ஆண் ஒருவரும், வலப்பனை பிரதேசத்தை சேர்ந்த 57 வயதுடைய ஆண் ஒருவரும், இரத்தினபுரி பிரதேசத்தை சேர்ந்த 68 வயதுடைய ஆண் ஒருவரும் மற்றும் குளியாப்பிட்டி பிரதேசத்தை சேர்ந்த 69 வயதுடைய ஆண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

Post a Comment

0 Comments