கடந்த ஏப்ரல் மாதத்தில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 205 பேர் உயிரிழப்பு
கடந்த ஏப்ரல் மாதம் நாட்டில் 1959 வாகன விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன.
இதன் காரணமாக 205 பேர் உயிரிழந்துள்ளதாகவும்,1254 பேர் காயமடைந்துள்ளதாகவும் காவற்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவற்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் இடம்பெற்ற வாகன விபத்துக்களில்,அதிகமான விபத்துக்கள் மேல் மாகாணத்தில் இடம்பெற்றுள்ளன.
768 விபத்துக்கள் மேல் மாகாணத்தில் இடம்பெற்றதாக காவற்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
No comments: