திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 17,175 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை


சென்னை கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 17,175 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே மு.க.ஸ்டாலின் முன்னிலை வகித்து வந்தார். தற்போதைய நிலவரப்படி மு.க.ஸ்டாலின் 17,175 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். மு.க.ஸ்டாலின் 26764 வாக்குகளும், ஆதிராஜாராம் 9489 வாக்குகளும் பெற்றுள்ளனர்

போடிநாயக்கனூர் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் தங்க தமிழ்ச்செல்வனை விட 4,069 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார்.

விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் பிரேமலதா விஜயகாந்த் கடும் பின்னடைவை சந்தித்துள்ளார்.

வாக்கு எண்ணிக்கை துவங்கியது முதலே காங்கிரஸ் வேட்பாளர் முன்னிலை பெற்றார். இரண்டாவது இடத்தில் பாமக வேட்பாளர் வந்த நிலையில் 3 ஆவது இடத்தில் தான் பிரேமலதா விஜயகாந்த் உள்ளார்.

எட்டு சுற்றுகள் முடிவடைந்த நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் 25,323 வாக்குகளும், பாமக வேட்பாளர் 19,533 வாக்குகளும் பெற்றனர். பிரேமலதா விஜயகாந்த் 9,902 வாக்குகள் பெற்றுள்ளார். மேலும் 18 சுற்று வாக்குகள் எண்ணப்பட உள்ளன.

No comments: