குஜராத் மருத்துவமனையில் தீ விபத்து -12 கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு!


குஜராத் மாநிலம் பருச் நகரில் உள்ள படேல் கொரோனா சிகிச்சை மருத்துவமனையில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 12 கொரோனா நோயாளிகள் உயிரிழந்தனர்.

மின்கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாகவும், பின்னர் அது சரிசெய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் "படேல் வெல்ஃபேர் அறக்கட்டளை கோவிட் 19 மருத்துவமனையிலுள்ள ஐ.சி.யூ  பிரிவில் இன்று அதிகாலை 12.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. நீண்ட போராட்டத்துக்கு பிறகு, தீ அணைக்கப்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் குறைந்தது 12 பேர் இறந்திருக்க வாய்ப்புள்ளது என்று முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றது. 

மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சுமார் 50 நோயாளிகள், மற்றும் உள்ளூர் மக்கள் தீயணைப்பு வீரர்களால் மீட்கப்பட்டு அவர்கள் வேறு பிரிவுக்கு மாற்றப்பட்டனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில நாட்களுக்கு முன்பு, குஜராத்தில் உள்ள சூரத் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் நடந்த இதேபோன்ற மற்றொரு தீ விபத்தில் 16 கொரோனா நோயாளிகள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 


No comments: