கொட்டகலை - 11ம் இலக்க லயன்குடியிருப்பு தொகுதி காலவரையின்றி முடக்கம்


 
எஸ்.சதீஸ்

கொட்டகலை பொது சுகாதார பிரிவிற்குட்பட்ட கொட்டகலை போரஸ்கில் தோட்டபகுதியில் 11ம் இலக்க லயன் குடியிருப்பு தொகுதி காலவரையின்றி முடப்பட்டுள்ளதாக கொட்டகலை கொது சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

 31.05.2021. திங்கள் கிழமை இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக பொது சுகாதார வைத்திய அதிகாரி மேலும் தெரிவித்தனர். 

குறித்த தோட்டபகுதியில் 10குடும்பங்களை சேர்ந்த 48பேர் சுயதனிமை படுத்தப்பட்டுள்ளதோடு குறித்த லயன் தொகுதி முடக்கப்பட்டுள்ளது 

குறித்த லயன் தொகுதியில் உல்ல ஆண் ஒருவர் திடிரென உயிர்ழந்தமையை அடுத்து குறித்த நபருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சீ.ஆர் அறிக்கையின் ஊடாக கொரேனா தொற்று உருதி செய்யப்பட்டதாகவும் 

தொற்றில் உயிர்ழந்த நபர் 72வயதுடைய முன்று பிள்ளைகளின் தந்தையான எம்.கிருஸ்னண் என்வரே இவ்வாறு உயிர்ழந்துள்ளதாக பொது சுகாதார அதிகாரிகளின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

 இதற்கு முன்பு குறித்த லயன் தொகுதியில் நபர் ஒருவர் கொரேனா தொற்றினால் உயிர்ழந்துள்ளதாக கொட்டகலை பொது சுகாதார வைத்திய அதிகாரிகள் மேலும் குறிப்பிட்டனர்

Post a Comment

0 Comments