கொரோனா வைரஸ் தொற்று - நாட்டில் மேலும் 11 கொரோனா மரணங்கள் பதிவு


நாட்டில் மேலும் 11 கொரோனா மரணங்கள் நேற்றைய தினம் பதிவாகியுள்ளன.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 678 ஆக அதிகரித்துள்ளது.

இதற்கமைய, பிலியந்தலை பிரதேசத்தை சேர்ந்த 79 வயதுடைய பெண் ஒருவரும், தெஹியத்தகண்டிய பிரதேசத்தை சேர்ந்த 76 வயதுடைய ஆண் ஒருவரும், மாத்தளை பிரதேசத்தை சேர்ந்த 67 வயதுடைய பெண் ஒருவரும், களுத்துறை பிரதேசத்தை சேர்ந்த 82 வயதுடைய ஆண் ஒருவரும், வத்தளை பிரதேசத்தை சேர்ந்த 53 வயதுடைய ஆண் ஒருவரும், திவுலப்பிட்டி பிரதேசத்தை சேர்ந்த 51 வயதுடைய ஆண் ஒருவரும், பெபிலியாவல பிரதேசத்தை சேர்ந்த 77 வயதுடைய ஆண் ஒருவரும், அனுராதபுரம் 64 வயதுடைய பெண் ஒருவரும், கொழும்பு 14 பிரதேசத்தை சேர்ந்த 94 வயதுடைய ஆண் ஒருவரும், பரகஸ்தொட பிரதேசத்தை சேர்ந்த 65 வயதுடைய ஆண் ஒருவரும் மற்றும் களனி பிரதேசத்தை சேர்ந்த 46 வயதுடைய பெண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.


No comments: