நுவரெலியா மாவட்டத்தில் 104 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி

க.கிஷாந்தன்


நுவரெலியா மாவட்டத்தில் நேற்று (03) மாத்திரம் 104 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று கொரோனா தடுப்பு செயற்பாட்டு மையம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி அட்டன் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 23 பேருக்கும், வலப்பனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 23 பேருக்கும், நுவரெலியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 23 பேருக்கும் வைரஸ் தொற்றியுள்ளது.

அத்துடன், அம்பகமுவ சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 6 பேரும், பொகவந்தலாவ சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஐவரும், டிக்கோயா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஐவரும் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கினிகத்தேனை, கந்தபளை, நோர்வூட், லிந்துலை மற்றும் ராகலை ஆகிய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளிலும் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

அதேவேளை, கடந்த ஒக்டோபர் 24 ஆம் திகதி முதல் நேற்று வரை நுவரெலியா மாவட்டத்தில் ஆயிரத்து 684 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


No comments: