கொரோனா சிகிச்சை மையங்களுக்கு, இலங்கை இராணுவம் 10,000 க்கும் அதிக படுக்கைகளை வழங்கவுள்ளது - இராணுவத் தளபதி


நாட்டில் தற்போது நிலவும் கொரொனா தொற்று குறித்து நேற்றைய தினம் கலந்துரைடயால் இடம்பெற்றது.

இதன் போது, இலங்கை இராணுவம் 100,000க்கும் மேற்பட்ட படுக்கைகளை வழங்குவதோடு, இராணுவ முகாம்களை இடைநிலை பராமரிப்பு மையங்களாகச் செயற்படுத்தவுள்ளது என இராணுவத் தளபதியும், தேசிய கொவிட் -19 தடுப்பு செயற்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய ஆயுதப்படைகள் சாதாரண படுக்கைகளையும் கொவிட்-19 நோயாளிகளுக்கு இடை நிலை பராமரிப்பு மையங்களாகச் செயற்பட முகாம்களையும் வழங்குவர்.

மேலும் மருத்துவமனைகளில் அதி தீவிர சிகிச்சைப் பிரிவின் திறனை அதிகரிப்பர் என சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதன் படி அதி தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் படுக்கைகளின் எண்ணிக்கையை விரைவில் அதிகரிப்பது தொடர்பாக யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

புதிய நோயாளிகளைக் கண்டுபிடிப்பதற்கும், குறிப்பிட்ட பகுதிகளைத் தனிமைப்படுத்துவதற்கும் பி.சி.ஆர் சோதனைகளின் எண்ணிக்கையை 15,000 – 20,000 ஆக அதிகரிக்க வேண்டும்.

தற்போது கொரோனா சிகிச்சை நிலையங்கள் அதிக பணியாளர்களுடன் பகல் மற்றும் இரவு முழுவதும் கொரோனா நோயாளர்கள் தொடர்பான முன்னேற்றங்களைக் கண்காணித்து வருவதுடன் , சுகாதாரப் பிரிவுடன் தொடர்பு கொண்டு புதிய நோயாளிகள் பற்றிய விபரங்களை சேகரித்து வருவதாகவும் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் 1906 எனும் இலக் கத்துக்குத் தொடர்பு கொண்டு உதவியைப் பெறலாம்.

தனிமைப்படுத்தல் பணிகளை உன்னிப்பாகக் கண்காணிக்கும்படி பொலிஸாருக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளதுடன், வீடுகளில் 7 நாட்கள் முதல் இரண்டு வாரங்கள் வரை தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டியது அவசியம் எனவும் இராணுவத் தளபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments