பொகவந்தலாவை பகுதியில் மேலும் 07 பேருக்கு கொரோனா தொற்று !(எஸ்.சதீஸ்)

பொகவந்தலாவை பொது சுகாதார காரியாலய அதிகார எல்லைக்குட்பட்ட பகுதியில்மேலும் 07 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் இதுவரையில்288 பேருக்கு தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொது சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

பொகவந்தலாவை வைத்தியசாலையில் சிகிச்சைக்கு வந்த நோயாளர்கள் 10 பேருக்குகடந்த வாரம் மேற்கொண்ட பி.சி.ஆர் பரிசோதனையின் அறிக்கை கிடைக்கப்பெற்ற போதே கொட்டியாகலை, மோரா,குயினா தோட்டத்தை சேர்ந்த 07 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது

அதிக தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதையடுத்து விசேட
கலந்துரையாடலொன்று பொகவந்தலாவை பொது சுகாதர காரியாலயத்தில் வைத்திய அதிகாரி வைத்தியர் வை.எல்.பி.பஸ்நாயக தலைமையில் இன்று இடம்பெற்றது .

கலந்துரையாடலில் பொகவந்தலாவை பொது சுகாதார பிரிவு சுகாதார பரிசோதகர்கள் உட்பட பலர் கலந்து கொண்டதுடன் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த முன்னெடுக்கப்பட்ட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் இதன் போது
கலந்துரையாடப்பட்டது.

Post a Comment

0 Comments