மீளமைக்கப்பட்ட யாழ்ப்பாண பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி மீள் திறப்பு


யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்துாபி யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களால் இன்று காலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நிர்மானிக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்துாபி கடந்த ஜனவரி மாதம் 8ம் திகதி இரவு, பல்கலைக்கழக நிர்வாகத்தினால் தகர்க்கப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து மாணவர்கள்,அரசியல் தலைவர்கள்,சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் கண்டனம் வெளியிட்டனர்.

இந்நேரம் பல்கலைக்கழக மாணவர்கள் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இவ்வாறான கடுமையான அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்ட நிலையில்,தகர்க்கப்பட்ட இடத்திலேயே நினைவுத் துாபியை மீள அமைப்பதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் இணங்கியது.

பல்கலைக்கழக உபவேந்தரின் அனுமதிக்கு அமைய,ஜனவரி மாதம் 11ம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவுத் துாபிக்கான அடிக்கல் நாட்டப்பட்டது.

இதையடுத்து,முன்னெடுக்கப்பட்ட நிர்மானப்பணிகள் நிறைவுக்கு வந்த நிலையில்,இன்றைய தினம் நினைவுத்துாபி திறந்து வைக்கப்பட்டுள்ளது.


No comments: