மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நோய் பரவும் வீதம் அதிகரிப்புமட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நோய் பரவும் வீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நோயினை கட்டுப்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் இன்று புகைவிசிறும் நடவடிக்கைகளை சுகாதார தரப்பினர் முன்னெடுத்துள்ளனர்.

மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் வாராந்தம் 10 நோயாளிகள் இனங்காணப்படுகின்றனர்.

இந்தநிலையை டெங்கு பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக மட்டகளப்பு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ்.கிரிசுதன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் மக்கள் தங்களது சுற்றுப்புறங்களை சுத்தமாக பேணுமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

No comments: