மருத்துவமனையிலிருந்து கொரோனா தடுப்பூசிகள் திருட்டு


ஹரியாணாவின் ஜிந்த் மாவட்டத்தில் உள்ள சிவில் மருத்துவமனையில் பிபிசி மையத்தில் இருந்து 1,710 டோஸ் கொரோனா தடுப்பூசி திருடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவிஷீடு டோஸ் 1270 மற்றும் கோவாக்சின் 440 டோஸ்கள் மருத்துவமனையில் இருந்து திருடு போயுள்ளதாக மருத்துவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அதிகாரிகளிடம் புகார் வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர்கள் விசாரணை நடத்துவார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

காவற்துறை  தரப்பிலும் விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் அதிகரித்து வருவதை அடுத்து,கொரோனா தடுப்பூசி மற்றும் ஒட்சிசன் சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் இது போன்ற திருட்டு சம்பவங்கள் இடம்பெறுவது அதிகரித்து வருகின்றது.

No comments: