பஸ்ஸின் சில்லில் சிக்கி இளைஞன் பரிதாபமாக பலி! ஹட்டனில் சோகம்

பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்


ஹட்டன் நகர பிரதான வீதியில் பஸ்ஸின் சில்லில் சிக்குண்ட இளைஞன் ஒருவன் ஸ்தலத்திலே பலியானதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

ஹட்டன் மக்கள் வங்கிக்கருகில் இன்று (12) பிற்பகல் 02 .00 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றது.

விக்கடனிலிருந்து ஹட்டன் நோக்கி வந்த தனியார் பயணிகள் பஸ்ஸில் மோதுண்டு விழுந்த இளைஞன் பஸ்ஸின் பின் சில்லில் சிக்குண்டு பலியாகியுள்ளார்.

சடலம் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளதுடன் பஸ்ஸின் சாரதி ஹட்டன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பலியான இளைஞன் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என தெரிவிக்கப்படும் நிலையில் ஹட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments: