தமிழக சட்டப்பேரவை தேர்தல் - 234 தொகுதிகளிலும் நாளை வாக்குப்பதிவு....!


தமிழகத்தில் 234 தொகுதிகளுக்குமான சட்டப்பேரவை தேர்தல் நாளை நடைபெறுவுள்ளது.

ஒரே கட்டமாக நடைபெறவுள்ள இந்த தேர்தல் காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகி இரவு 7.00 மணிக்கு நிறைவடையவுள்ளது.

இதற்காக மாநிலம் முழுவதும் 37 ஆயிரம் இடங்களில் 88 ஆயிரத்து 937 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 10 ஆயிரத்து 727 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளன.

அதேநேரம் பாதுகாப்பு பணிகளுக்காக 1.58 இலட்சம் பொலிஸார் மற்றும் துணை இராணுவத்தினர்  ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இறுதி பிரச்சாரங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், தொகுதிகளுக்கு தொடர்பில்லாத அனைவரும் உடனடியாக வெளியேற வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அத்துடன் அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

பறக்கும் படைகள், நிலை கண்காணிப்புக்குழுக்களின் வாயிலாகவும் தீவிர சோதனை நடவடிக்கைள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் சுமார் 702 பறக்கும் படைகள், நிலை கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments